கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக இங்கிலாந்து எம்.பி.க்கள் பிரதமருக்கு கடிதம்
லண்டன், மே.17- தெற்கு ஆசிய அணுஉலை எதிர்ப்பு குழுவின் சார்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பு நளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப் பட்டு உள்ளது. அதன்பிறகு, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் துன்புறுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதப்பட்ட கடிதம், இந்திய தூதரகத்திடம் வழங்கப்படுகிறது. அதில், கூடங்குளம் அணுமின் நிலையம் அமைத்ததில் சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும், மேலும் அங்கு மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.