Posts
Showing posts from December, 2011
முல்லை பெரியாறு அணை விவகாரம்: கேரள சட்டசபை சிறப்பு கூட்டம் 9-ந் தேதி நடக்கிறது
- Get link
- X
- Other Apps
திருவனந்தபுரம், டிச.1- முல்லை பெரியாறு அணை விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக, கேரள சட்டசபையின் ஒரு நாள் சிறப்பு கூட்டம், வருகிற 9-ந் தேதி நடைபெறுகிறது. முதல்-மந்திரி உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்ற கேரள மந்திரிசபை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து உம்மன் சாண்டி கூறுகையில், சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்துவதற்கு எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணியின் ஆதரவையும் பெற்றுள்ளோம். முல்லைப்பெரியாறு பிரச்சனையில் கேரள மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் விவாதம் நடைபெறும் என்றார்.