Posts

Showing posts from September, 2016

உலகிற்கு பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாக்கிஸ்தான் - இந்திய பிரதமர் மோடி ஆவேசம்

உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடு பாகிஸ்தான் என்று பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக  பேசினார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் கேரள மாநிலம் கோழிக்கோடில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:  ஆசியாவில் நடக்கும் அனைத்து பயங்கரவாத சம்பவங்களுக்கும் அந்த நாடு தான் காரணம். பாதிக்கப்படும் நாடுகள் அனைத்தும் அந்த நாட்டை தான் குறை கூறுகின்றன. பயங்கரவாதிகள், அந்நாட்டு தெருக்களில் சுதந்திரமாக திரிகிறார்கள். ஒசாமா பின்லேடனும் அங்கு தான் பதுங்கி இருந்தான். அவனை போன்ற கொடூரமான பயங்கரவாதிகளை பாதுகாத்து வளர்கிறது. சமீபத்தில் நம் தேசத்தின் 18 வீரர்கள் தங்கள் இன்னுயிரை நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர். நமது அண்டை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பயங்கரவாதிகளால் அவர்கள் உயிரிழந்துள்ளார்கள். யூரி தாக்குதல் நாடு முழுவதும் அந்நாட்டின் மீதான கோபத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. நமது ராணுவத்தினரை எண்ணி நாம் பெருமை கொள்வோம். யூரி தாக்குதலுக்கு காரணமானவர்களை மறக்கமாட்டேன். கடந்த சில மாதங்களில் 110 பயங்கரவாதிகள் நம் வீரர்களால் சுட்டுக்கொல்லப

முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது: அப்பல்லோ நிர்வாகம் தகவல்

தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காணொலி காட்சிகள் மூலம் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் ஜெயலலிதாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடரந்து கண்காணித்து வருகின்றனர்.  ஜெயலலிதா உடல் நிலை சீராக உள்ளதாக அப்பல்லோ நிர்வாகமும் தெரிவித்துள்ளது.  இதை தொடர்ந்த,  அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி முதல் அமைச்சர் அம்மா அவர்கள்  உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.   ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதால், அமைச்சர்கள் ,அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர்அப்பல்லோ மருத்துவமனையில் குவிந்துள்ளனர். ஜெயலலிதாவின் உடல் நிலை தேறி வருவதால் இன்று காலை வீடு திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்பு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க கோரிக்கை

சென்னை ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை ஐக்கோர்ட்டில் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்ததோடு, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியது   இது தொடர்பான மனு, சென்னை ஐக்கோர்ட் நீதிபதி சிவஞானம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அமர்வில், மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஏற்றுக் கொள்ளப்பட்டதை அடுத்து, பிற்பகல் 2.15 மணிக்கு மனு விசாரணைக்கு வருகிறது. ராம்குமாரின் பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க ராம்குமார் தரப்பு விடுத்த கோரிக்கை ஏற்பு.பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.ராம்குமார் மரணம் தொடர்பான மனு அவசர வழக்காக ஏற்க்கப்பட்டது ..

மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டு வெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமி கைது

அமெரிக்காவின் மன்ஹட்டன், நியூஜெர்சி குண்டுவெடிப்பு குற்றவாளி அகமத் கான் ரகாமியை போலீஸ் கைது செய்தது. அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி நகரங்களை மையமாக வைத்து கடந்த 3 நாட்களாக குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து வருகின்றன. முதலாவதாக நியூஜெர்சி கடற்கரையோர பூங்கா நகரில் கடந்த 17–ந்தேதி காலையில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று இரவு மன்ஹட்டன் அருகே உள்ள செல்சீ நகரில் வெடிகுண்டு வெடித்தது. இதில் 29 பேர் படுகாயமடைந்தனர். சிறிது நேரத்துக்குப்பின் அந்த பகுதியில் இருந்து சற்று தொலைவில் மற்றொரு வெடிக்காத குண்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவங்களால் நிகழ்ந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாலையில் நியூஜெர்சியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்தது. அங்குள்ள எலிசபெத் ரெயில் நிலையம் அருகே குப்பைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த இருவர், அங்கே பையில் மர்ம பொருள் இருந்ததை கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும