Posts

Showing posts from June, 2011

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் 2 நாளில் விடுதலை

சென்னை, ஜூன்.24-    இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் உடனடியாக விடுவிக்கப்பட பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இது மட்டுமல்லாமல், மத்திய அரசிடம் இதுகுறித்து தொடர் நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளரை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன் மற்றும் ஏனைய மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு, சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனது எண்ணத்தை வலியுறுத்தினார். இதன் அடிப்படையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களும் இன்னும் 2 நாட்களில் விடுவிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு உறுதி அளித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு திருத்தி அமைப்பு: ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை, ஜூன்.24-   அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது. குழுத் தலைவர்:- அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதா. குழு உறுப்பினர்கள்:- அவைத்தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்பு செயலாளர் கால்நடைத் துறை அமைச்சர் சொ.கருப்பசாமி, தேனி மாவட்டம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.( தினத் தந்தி)

கனிமொழி ஜாமீன் மனு நிராகரிப்பு

புதுடில்லி : கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை காலை 10.30 மணியளவில் டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இதில் கனிமொழியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ( தின மலர் )

டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் பலி

மதுரை: மதுரை அருள்தாஸ் புரத்தில் டிப்பர் லாரி மோதிய விபத்தில் இருவர் பலியாயினர். இது பற்றிய விபரம் வருமாறு: திருச்சி திருவாணைக்காவலை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களது மகன் மணிகண்டன். கோவிந்தம்மாளும், மணிகண்டனும் மதுரை அருள்தாஸ் புரத்தில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தனர். தத்தனேரி மெயின்ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டம் முன்பாக மினி லாரி ஒன்றில் இருந்து குடிதண்ணீரை இறக்கும் பணியில் அருள்தாஸ் புரத்தை சேர்ந்த அந்தோணி என்பவர் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது கோவிந்தம்மாளும், மணிகண்டனும் அவ்வழியே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை பாத்திமா கல்லூரி பகுதியில் இருந்து டிப்பர் லாரி ஒன்றை ராமநாதபுரத்தை சேர்ந்த அனந்தகுமார் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது எதிர்பாரதவிதமாக டிப்பர்லாரி தாய் மற்றும் மகன் மீது மோதியதோடு மட்டுமல்லாமல் மினிலாரி மீதும் மோதியது. இவ்விபத்தில் கோவிந்தம்மாள்,அந்தோணி ஆகியோர்சம்பவஇடத்திலேயே பலியாயினர்.பலத்தகாயமடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து தல்லாகுளம்

விபத்து நடந்தது எப்படி?: பஸ் டிரைவர் பேட்டி

Image
வேலூர், ஜுன்.8- சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு தனியார் ஆம்னி பஸ் நேற்று இரவு சென்று கொண்டு இருந்தது. வேலூர் மாவட்டம் ஓச்சேரியை அடுத்த காவேரிப்பாக்கம் அருகே சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது திடீரென பஸ் லாரி மீது மோதியது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பாலத்தில் மோதி 15 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் டீசல் டேங்கர் கசிந்து திடீரென்று தீப்பிடித்து பஸ் முழுவதும் தீ பரவியது. பஸ்சில் ஒருபக்கம் மட்டுமே கதவு இருந்ததாலும், பஸ் கீழே விழும்போது கதவு அடிபாகத்தில் மாட்டி கொண்டதால் பயணிகள் வெளியே வரமுடியவில்லை. சிலர் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்தனர். அதுவும் முடியவில்லை. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 22 பயணிகள் தீயில் கருகி பலியானார்கள். டிரைவர், ஒரு பயணி மட்டுமே உயிர் தப்பினர். முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது அந்த லாரி இ